"ஒடிசாவில் ஐஏஎஸ் முன்னாள் அதிகாரி பாண்டியனுக்கே அதிகாரம்" : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஒடிசாவில் பாண்டியன், அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் இணைந்து PANN ஆட்சி நடப்பதாக கேந்திரபாரா பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
முதலமைச்சரைவிட அதிகாரம் படைத்த கார்த்திக்கேயன் பாண்டியனின் இந்த கூட்டணியில் 22 பேர் பலன்பெற்றதாகவும் சுரங்க முறைகேட்டில்
9 லட்சம் கோடி ரூபாய், நில மோசடியில் 20,000 கோடி, தோட்டப்பயிர் மோசடியில் 15,000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த பணம் மீட்கப்பட்டு, மக்களுக்கு திருப்பித் தரப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
Comments